Saturday, October 29, 2011

முறைமை பராமரித்தல் (System Maintenance)

புதிய முறைமையொன்றை அமுல்படுத்திய பின் அதனை செயற்படுத்தும்போது பிரச்சினைகள் ஏற்படலாம். கணினி முறைமையின் சிறப்பம்சமாவது தொழில்நுட்பத்தின் துரித முன்னேற்றத்திற் கேற்ப அதனைத் தற்காலப்படுத்தப்பட வேண்டியமையாகும். முறைமை நடாத்தும் கட்டத்தில் முறைமையிற்கு ஏற்படும் மாற்றங்களை பரீட்சித்துப் பார்த்துஅதற்கான உத்தேச முறைமை நடாத்தல் கமிட்டியின் மூலம் நிறுவனத்தின் முகாமைத்துவத்திற்கு முன்வைப்பதாகும். அதேபோல் முறைமை நடாத்தும் கமிட்டி மற்றும் முகாமைத:தவத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டிய பல விடயங்க்ள உள்ளன. முறைமையின் நோக்கம், ஆற்றல், உற்பத்தித்திறன், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், செலவு, பாதுகாப்பு மற்றும் முறைமை மூலம் கிடைக்கப்படும் இலாபம் இதில் முக்கியமானதாகும். முறைமை பராமரித்தலின்போது கண்டறிந்த மாற்றங்களை மேற்படி மாற்றங்களுக்கு அமையவே செய்ய வேண்டும்.

முறைமை அமுலாக்கம் (System Implementation)

நிறைவு செய்துகொண்ட முறைமையை அமுல்படுத்துவது இக்கட்டத்தில் நடைபெறும்.

இங்கு முழு முறைமையின் செயற்பாட்டை அட்டைப்படுத்தப்படுவதுடன் முறைமையினை பயன்படுத்தும் விதம் பற்றி பயனர்கள் அனைவருக்கும் அறிவூட்டப்படும். முறைமையினை அமுலாக்கம் பல கட்டங்களாக நடைபெறும். அவையாவன:

நேரடி அமுலாக்கம் (Direct Implimentation)
சமாந்தர அமுலாக்கம் (Parallel Implimentation)
கட்ட (பிரிவு) அமுலாக்கம் (Phased Implimentation)
முன்னோடி அமுலாக்கம் (Pilot Implimentation)

முறைமையிற்கு தேவையான வன்பொருட்களை நிருவுவதும் மென்பொருட்களை நிருவுவதும் இக்கட்டத்தில் நடைபெறும். அவ்வாறே முறைமயின் வெற்றி, தோல்வி இக்கடத்திலேயே தீர்மானிக்கப்படும்.

முறைமை பரீட்சித்தல் (Systems Testing)

இக்கட்டத்தின் அடிப்படை நோக்கமாவது பிழைகளற்ற தரத்தில் உயர்ந்த முறைமை யொன்றினை சேவை பெருநருக்கு வழங்குதலாகும். இங்கு சுயாதீன குழுவொன்றின் மூலம் முறைமையை முழுதாக பரிசோதனைக்கு உள்ளாக்குவதோடு முறைமைமயால் எதிர்பார்க்கப்படும். தேவையினை அவர் எதிர்பார்க்கும் வகையில் வழங்கப்படுகின்றதா என்பதை பரிசீலனை செய்யப்படும். அதே போல் நிரலில் உள்ள குறைபாடுகளையும் பரிசீலனை செய்யப்படும். முறைமை பரிசோதனை கட்டத்தில் முறைமையினை கீழ்வரும் பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்படும்.

அலகு பரீட்சித்தல் (Unit Testing)
ஒன்றிணைத்து பரீட்சித்தல் (Integrated Testing)
முறைமை பரீட்சித்தல் (System Testing)
ஏற்புப் பரீட்சித்தல் (Acceptance Testing)

Thursday, October 27, 2011

முறைமை விருத்தி (System Development)

திட்டமிடும் முறைகளுக்கு அமைய முழுமையான முறைமையை மொடியூல்களுக்கு பிரித்து நிரல்களுக்கு வழங்கப்படும். நிரல்களினால் உகந்த கணினி மொழியினை பயன்படுத்தி பிழைகள் குறைந்த நிரல்கள் அடங்கிய பிரயோக மென்பொருள் முறைமை தயாரிக்கப்படும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட மொடியூல்கள் அனைத்தையும் முன் தயார் செய்யப்பட்ட இடைமுகத்துடன் தொடர்புபடுத்தி முழு முறைமை விருத்தி செய்யப்படும்.

முறைமை வடிவமைத்தல் (Systems Design)

உத்தேச புதிய முறைமை வடிவமைக்கப்படும்போது சாத்திய வள ஆய்வு, முறைமை   பகுப்பாய்வு போன்ற கட்டங்களின் பிரதி பலனாகவேயாகும். முறைமை தயாரிப்பு பிரதான இரண்டு முறையில் காட்டலாம்.

1. தர்க்க முறைமை வடிவமைத்தல் ; (Logical Systems Design)
இதில் முறைமையின் தரவுகள், தகவல்கள், செயற்பாடுகள் மற்றும் கோவைகள் போன்ற தர்க்க வகையில் சம்பந்தப்படக்கூடிய முறையில் விளக்கிக் காட்டப்படும். இதற்கான முறைகள் கீழ்வருமாறு:

முறைமை பாய்ச்சல் வரைபடம் (Systems Flow Diagram)
தரவு பாய்ச்சல் வரைபடம் (Data Flow Diagram)

2. பௌதிக முறைமை வடிவமைத்தல் - (Physical Systems Design)
இதில் கீழ்க்காணும் காரணிகள் பற்றி அவதானம் செலுத்தப்படும்.

இடைமுக வடிவமைப்பு
உள்ளீடு
வடிவமைத்தல்
வெளியீடு
நிரல்படுத்தல்
உபயோகித்தல்
பாதுகாப்பு

முறைமை தயாரிப்பினால் தர்க்க மற்றும் பௌதிக முறைமை தயாரிப்பிற்கான தகவல்களை மிகவும் ஒழுங்கான முறையில் ஆவணப்படுத்தப்படும்.

முறைமை பகுப்பாய்வு செய்தல் (Systems Analysis)

சாத்தியப்பாடு அறிக்கையைப் பற்றி செயற்றிட்ட கமிட்டி மூலம் புதிய முறைமையொன்றின் அவசியத்தைப் பற்றி தீர்வுக்கு வந்தால் அதற்கான விபரமான பரிசீலனைக்குச் செல்ல இக்குழு தீர்மானிக்கும். இதற்கமைய சாத்தியப்பாட்டு அறிக்கையினூடாக தரப்பட்டுள்ள விடயங்களை மேலும் பகுப்பாய்வு செய்யப்படும். புதிய முறைமையின் நோக்கம், அதற்குரிய சந்தர்ப்பம், தேவைப்படும் பௌதிக மற்றும் மனித வளங்கள், முன்மொழியப்பட்ட புதிய முறைமையை விருத்தி செய்யும்போது ஏற்படும் தடங்களும், வரையறைகளும் போன்றவை விசேடமாக ஆராயப்படும். முறைமை பகுப்பாய்வு செயற்பாட்டின்போது நிறுவனத்தின் வடிவமைப்பைப் பற்றியும், முகாமைத்துவ மட்டங்கள் மற்றம் செயற்பாட்டு மட்டங்கள் போன்றவற்றையும் விபரமாக தகவல் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்குக் காரணம் உத்தேச புதிய முறைமை மூலம் முகாமைத்துவத்திலும் பயனர்களின் தேவைகளையும் செய்ய வேண்டியவையேயாகும். ஆகையால் முறைமை பகுப்பாய்வு கட்டத்தின் தரவு சேகரித்தல் மற்றம் தரவுகளை தகவல்களாக பரிமாற்றம் செய்தல் என்பன மூலம் முறைமையின் அவசியத்தை விபரமாக பரிசீலனை செய்யப்படும்.

Wednesday, October 26, 2011

முறைமை புலனாய்வு (Systems Investigation)

புதிய முறைமையொன்றிற்கான கருத்தை முன்வைத்தல் அல்லது நடைமுறையிலுள்ள முறைமையொன்றிற்கான விருத்தியுடன்கூடிய கருத்துக்கள் முன்வந்தபோது இக்கட்டங்கள் செயற்படும். இக்கட்டத்தின்போது முறைமையைப் பற்றிய பூரண அறிவைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அவ்வாறான முறைமையை நிர்மாணிக்க வேண்டிய தேவை தீர்மானம் எடுக்கப்படும்.

இதற்காக இரண்டு பகுதிகளினூடாக புலனாய்வு செய்யப்படும்.

1. பூர்வாங்கப் புலனாய்வு (Preliminary Investigation) - இஙகு; முறைமையை அடையாளஙக்ணல் மற்றும் அதில் நிகழும் பிரச்சினைகளை அடையாளங் காணல் மேற்கொள்ளப்படும்.

2. சாத்த்திய வள ஆய்வு (Feacibility Study) - முறைமையை ஏற்படுத்துவதற்கான பொருத்தப் பாட்டினை பார்ப்பதுடன் அதில் முன்மொழியப்பட்ட முறைமை தனி நபருக்கு அல்லது நிறுவனத்திற்கு எவ்வாறு பொருந்தும் என்பதை விபரமாக பகுப்பாய்வு செய்யப்படும்.

முறைமை விருத்தி வாழ்க்கை வட்டம் (Systems Development Life Cycle)

உட்புற மற்றும் வெளிப்புற மூலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் தரவுகள் நிரந்தரத் தீர்வை எடுப்பதற்கு உகந்த தகவல்களாக மாற்றுவதற்கான விதிமுறைகள் தகவல் முறைமைகளில் காணலாம். ஆகையால் தகவல் முறைமைகள் மனிதனின் நாளாந்த வேலைகளை மிகவும் சிரமமாக செய்துகொள்ள உறுதுணையாகும். இதனால் அரச நிறுவனங்கள் போலவே தனியார் வியாபார கம்பனிகளும் தமது எதிர்பார்த்த இலக்கை அடைவதற்கு தற்போது உள்ள தகவல் முறைமைகளை புதுப்பிக்கின்றார்கள். அல்லது புதிய முறைமையொன்றை கட்டியெழுப்புகின்றார்கள்.

தகவல் முறைமையினை உருவாக்குவது மிகவும் கடினமான விடயமாகும். இதற்காக செல்லும் காலம், தேவையான மூலதனம், மற்றும் அதில் எதிர்பார்க்கும் உருவாக்கங்கள் என்பன பற்றி உள்ள நிலையற்ற தன்மை மிகப் பெரிதாகும். தகவல் முறைமையொன்றை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் பல விதிமுறைகள் உள்ளன. அதுபோலவே அவை மீள் செய்முறையாகும். ஜீவிகளுக்கு வாழ்க்கை வட்டமொன்று உள்ளபடியால் அவற்றின் பரிணாம செயற்பாடு அதன்படி நடைபெறும். இச்சிறப்பம்சத்தை தகவல் முறைமையிலும் காணலாம். ஆகவே தகவல் முறைமையை விருத்தி செய்வதற்கு பயன்படத்தப்படும் ஒரு செயற்பாடாக முறைமை விருத்தி வாழ்க்கை வட்டம் - SDLC என்பதை அடையாளம் காட்டலாம்.

முதலில் முறைமை தயாரிப்பாளர்களால் குறிப்பிட்ட முறைமையை பரவலாக அவதானிக்கப்படும்.

பின் முழு முறைமையையும் பகுதிகளாகவும் கட்டங்களாகவும் வேறு வேறாகக் கொண்டு விபரமாக பரிசீலனை செய்யப்படும். முறைமை விருத்த்தி வாழ்க்கை வட்ட்டத்த்தின் பிரதான கட்ட்டங்க்கள்

1. முறைமையை புலனாய்வு செய்தல். (Systems Investigation)
2. முறைமை பகுப்பாய்வு செய்தல் (Systems Analysis)
3. முறைமை வடிவமைத்தல (Systems Design)
4. முறைமை விருத்தி செய்தல (Systems Development)
5. முறைமை பரிசோதனை செய்தல் (Systems Testing)
6. முறைமை அமுலாக்கல் (Systems Implementation)
7. முறைமை பராமரித்தல (Systems Maintenance)

Wednesday, June 22, 2011

3. முறைமைப் பகுப்ப்பாய்வு.

 புதிய முறைமையொன்று அபிவிருத்தி செய்யப்படுகின்றது என கற்பனை செய்து கொள்ளுவோமாயின் அடுத்த நிலையானது (Phase) முறைமை பகுப்பாய்வாகும்.

• நடைமுறை முறைமைப் பற்றிய ஒரு ஆழமான கற்றலே முறைமைப் பகுப்பாய்வு நிலையில் நடைபெறுகின்றது.

• இங்கேயே உருவாக்கப் போகும் புதிய முறைமையின் நிர்மாண வேலைக்கான விபரங்கள் பெறப்படுகின்றன.

• முறைமையினால் நிறைவேற்றப்படும் பல்வேறு செயற்பாடுகள் மற்றும் முறைமையின் உள்ளேயும் வெளியேயும் அச்செயற்பாடுகளுக்கு இடையேயான தொடர்புகள் என்பன முறைமைப் பகுப்பாய்வில் ஆழமான கற்கப்படுகின்றது.

• பகுப்பாய்வின் போது நடைமுறை முறைமையில் கிடைக்கக் கூடிய கோப்புகள், தீர்மானம் நிறைவேறறு;ம் நிலைகள் மற்றும் நடைமுறை முறைமையில் கையாளப்படும் கொடுக்கல் வாங்கல்கள் போன்றவற்றிலிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

• இவ்வாறு தரவுகள் சேகரிக்கப்படுவதற்கு நேர்முகப்பரீட்சை (Interviews)நேரடி களஅவதானப்பு (on-site observation) மற்றும் வினாக்கொத்துகள்(questionnaire) போன்ற கருவிகள் உபயோகிக்கப்படுகின்றன.


• புதிய முறைமைக்கான சரியான எல்லையை (Boundary) இலகுவாக வரைந்து கொள்வதற்குபின்வரும் படிமுறைகளைப் பயன்படுத்த முடியும்.
- பிரச்சினைகள் மற்றும் பாவனையாளர்களின் புதிய தேவைகளையும் கருத்திற் கொள்ளல்.

-முறைமையின் புதிய பரப்பினை உள்ளடக்கியதாக முறைமையின் சார்பானவைகளையும் எதிரானவைகளையும் கருத்திற் கொண்டு செயற்படல்.

• தகவல் சேகரிக்கும் முறைகள் எவை?

o Interviews
o Interviews
o Documents
o Observation
o Discussions

2. சாத்தியவள ஆய்வு

2. சாத்தியவள ஆய்வு

• ஆரம்ப கற்றலின் பெறுபேறாகவே சாத்தியவள ஆயவு; அமைகின்றது. முன்மொழியப்பட்டமுறைமையானது தொழிற்படக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ள தன்மை, தேவைகளைப் பூரத்தி செய்யும் தன்மை, வளங்கள்களின் திறமையான பயன்பாடு, செலவுக்கேற்ப பயன்தரும் தன்மை என்பவற்றைப் பரீட்சித்துப் பார்க்கும் செயல்பாடாக சாத்தியவள ஆய்வு அமைகின்றது.

• சாத்தியவள ஆய்வின் பிரதான நோக்கு பிரச்சினை தீர்ப்பது மட்டுமன்றி குறிப்பிட்ட எல்லைப்பரப்பை (scope)அடைவதே ஆகும். செலவு (Cost) நன்மைகள் (benefits) என்பவற்றை மிகவும் திருத்தமாக மதிப்பீடு செய்தலே சாத்தியவள ஆய்வின் செயல்பாடாகும்.

1. முறைமை பற்றிய கற்றல்

• முறைமை அபிவிருத்தி வாழ்க்கைச் சக்கரத்தின் முதலாவது கட்டம் குறித்த முறைமையைப் பற்றிக் கற்றல் ஆகும்.

• இது தற்போது நடைமுறையிலுள்ள பௌதீக முறைமை (Physical system) எவ்வாறு காணப்படுகின்றது என்பதனைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

• நடைமுறையில் முறைமைக் கற்றலானது இரண்டு கட்டங்களாகச் செயற்படுகின்றது.

• முதலாவது முறைமையினுடைய ஆரம்ப கட்ட (Preliminary survey)) ஆய்வு ஆகும். இது முறைமையின் எல்லைப் பரப்பை (scope)இனங்கண்டு கொள்வதற்கு உதவுகின்றது.

• இரண்டாவது முறைமை மேலும் விரிவாவும், ஆழமாகவும் ஆய்வு செய்யப்படுகின்றது.

• இவ்வாய்வின் மூலம் தற்போதைய முறைமையில் பயனாளர்களின் தேவைகள், முறைமையில்காணப்படும் வரையறைகள் மற்றும் பிரச்சினைகள் போன்றன தெளிவாக ஆராயப்படுகின்றது.

• இந்த முறைமைக் கற்றலை முடிவு செய்த பின்னே முறைமை ஆய்வாளரினால் முறைமையின் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு பயனாளர்ளுக்கு முன்வைக்கப்படுகினறது.

• நடைமுறை முறைமையில் இனங்காணப்பட்ட அனைத்து விடயங்கள், நடைமுறை முறையில்காணப்படும் வரையறைகள், நிவர்த்தி செய்யத் தேவையான சிபாரிசுகள் மற்றும்

• பாயனாளரின் தேவையை நிவர்த்தி; செய்வதில் நடைமுறை முறைமையில் காணப்படும் பிரச்சினைகள் போன்றன இந்த முன்மொழியப்பட்ட முறைமையில் உள்ளடக்கப்படுகின்றன.

• முறைமை கற்றலை மேலும் ஆய்வுபூர்வமாக விளக்க, முறைமைக் கற்றல் நிலையானது பின்வரும் கட்டங்களையும் முறையே கடந்து செல்ல வேண்டும்.

- பிரச்சினை இனங்காணலும், செயல்திட்ட ஆரம்பமும் (problem identification and project initiation)

- பின்புல ஆய்வு (background analysis)- அனுமானித்தல் அல்லது கண்டுபிடிப்புகள்(inference or findings )

தகவல் முறைமை

தகவல் முறைமை• ஒரு நிறுவனம் குறிக்கோள் ஒன்றை அல்லது பலதை அடையும் பொருட்டு அதpல் உள்ள
அனைத்து அம்சங்களும் ஒன்று சேர்ந்து இயங்குவது முறைமையாகும்.
அல்லது
• ஏதாவது ஒரு குறிக்கோளை அடையும் பொருட்டு பல பகுதிகள் ஒன்றிணைந்து செயற்படுவது
எனப்படும்.
• முறைமை ஒன்றின் மூன்று முக்கிய அடிப்படை அம்சங்கள்.
1. உள்ளீடு 2. நிரற்படுத்தல் 3. வெளியீடு என்பனவாகும்.
• முறைமை ஒன்றை உருக்கிச் செயற்படும் போது அந்த நிறுவனம் தனது குறிக்குகோளை இலகுவில்
அடைந்து கொள்ள முடியும்.
• கணனி அடிப்படையிலான தகவல் துறைமை ஒன்றை உருவாக்குவது முறைமை அபிவிருத்தி
வாழ்க்கைச் சக்கரம் (SDLC) எனப்படும்.
• முறைமை அபிவிருத்தி வாழ்க்கைச் சக்கரத்தின் படிறிலைகள் வருமாறு :-
1. முறைமை பற்றிய கற்றல்
2. சாத்தியவள ஆய்வு.
3. முறைமைப் பகுப்பாய்வு.
4. முறைமை வடிவமைப்பு
5. முறைமைப் பரிசோதனை
6. முறைமை அமுவாக்கம்.
7. தொடர் பராமரிப்பு.