உயர்தர தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
Thursday, January 23, 2014
Saturday, February 23, 2013
Tuesday, August 7, 2012
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் 2011 ஆவணி அமைப்புக் கட்டுரை வினாக்கள்
01)
a) கணினிகளின் முதல் நான்கு தலைமுறைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள பிரதான தொழில்நுட்பவியல்புகளைக் குறிப்பிடுக.
b) செய்நிரல் நிறைவேற்றலில் பயன்படுத்தப்படும் கொணர்- நிறைவேற்று சுழற்சியைக் ((fetch - execute cycle) குறிப்பதற்கு ஒரு வரிப்படம் வரைக.
c) 8 bit இரண்டின் நிரப்பி (2’s complment) எண்கணிதத்தின் மூலம் 510 + (-3) கணிக்கப்படும் விதத்தைக் காட்டுக. மிகவும் மதிப்புறு MSB பிறப்பிக்கப்படும் எடுத்துச்செல் (Carry) உடன் எங்ஙனம் தொடர்புபடுவீர் என்பதை விளக்குக.
02)
a) FAT32, NTFS கோப்புமுறைமைகள் குறித்துப் பின்வரும் அட்டவணையின் முதல் நிரலில் நிரற்படுத்தப்பட்டுள்ள இயல்புகளை ஒத்த 2ம், 3ம் நிரலிலுள்ள மிகவும் பொருத்தமான நுழைவுச் சுற்றி வட்டம் வரைக.
010111000000111100
C) முறைவழியாக்கத்திலிருந்து முடிவுறுத்தல் வரையுள்ள பணிசெயல்முறைமை, முறைவழி(Operating system process transition diagram) மாறுகை வரிப்படத்தை வரைக.
03) பின்வரும் நிலைமைகளைக் கருதுக
.
a) மேற்குறித்த நிலைமைக்கு ஓர் ER வரிப்படத்தை வரைக.
a) FAT32, NTFS கோப்புமுறைமைகள் குறித்துப் பின்வரும் அட்டவணையின் முதல் நிரலில் நிரற்படுத்தப்பட்டுள்ள இயல்புகளை ஒத்த 2ம், 3ம் நிரலிலுள்ள மிகவும் பொருத்தமான நுழைவுச் சுற்றி வட்டம் வரைக.
b) 18 bit virtual memory address space (மெய்நிரல் நினைவக முகவரி வெளி) இருக்கும்; அதேவேளை அதில் ஒருபக்க முகவரிக்கு 6 bits பயன்படுத்தப்படுகின்றன.
i. மேற்குறித்த முகவரியிடல் மூலம் வரையறுக்கப்பட்ட பக்கங்களின் மொத்த எண்ணிக்கையைக் கணிக்க.
ii. பின்வரும் மெய்நிகர் நினைவக முகவரியை கருதுக.
010111000000111100
C) முறைவழியாக்கத்திலிருந்து முடிவுறுத்தல் வரையுள்ள பணிசெயல்முறைமை, முறைவழி(Operating system process transition diagram) மாறுகை வரிப்படத்தை வரைக.
03) பின்வரும் நிலைமைகளைக் கருதுக
.
ஒரு பாடசாலையிலுள்ள மாணவர்கள் volley
ball தடகளபோட்டி மேசைப்பந்து போன்ற வேறு விளையாட்டுக்களில் பங்குபற்றுகின்றனர். அப்பாடசாலையின் அதிபர், அனுமதி எண், மாணவர்பெயர், வீட்டு முகவரி, வகுப்பு, அம்மாணவர் பங்குபற்றும் விளையாட்டுக்கள் ஆகியவற்றுடுடன் ஒரு பதிவேட்டைப் பேண விரும்புகின்றார். ஒரு மாணவன் ஒன்றுக்கு மேற்பட்ட விளையாட்டுக்களில் மாணவர்கள் இருத்தல் கூடும். ஓவ்வொரு மாணவனும் ஒரு விளையாட்டிற்கு முன்னர் விதித்த மணித்தியால எண்ணிக்கையிலான மணித்தியாலங்களுக்குப் பங்குபற்றலாம்.
a) மேற்குறித்த நிலைமைக்கு ஓர் ER வரிப்படத்தை வரைக.
b) மேலே (a) இல் இனங்கண்ட தொடர்புடமையின்/ தொடர்புடைமைகளின் முதலிமை ஒன்றுக்கு ஒன்றானதா (one-to-one) ஒன்றுக்குப் பலவானதா (one-to-many), பலவுக்குப் பலவானதா (many-to-many) எனக் காரணங்கள் தந்து வகைப்படுத்துக.
c) ER வரிப்படங்கள், தொடர்புடைமைகள் மீது பண்புகளை (attributes) ஒதுக்குவதற்கு இடமளிப்பதில்லை. இக்கூற்று உண்மையானதா, பொய்யானதா எனக்கூறுக. தரப்பட்ட விடயத்தை பயன்படுத்தி உமது விடையை விளக்குக.
d) தரவுத்தள வடிவமைப்பாளர் ஒருவர் மேற்குறித்த தொகுதிக்கு பின்வரும் தொடர்பைத் தெரிவித்துள்ளார். இத் தொடர்பில் உள்ள இரு குறைபாடுகளைக் காட்டத் தேவையான மாற்றங்களைத் தெரிவிக்க.
4.
a) பின்வரும் மென்பொருள்களை முறைமை மென்பொருள் (System software) அல்லது பிரயோக மென்பொருள் (Application software) என வகைப்படுத்துக.
UNIX, Word Processing , Web browser
b) தரவுகளைத் தேக்கி வைக்க / மீட்க (retrieve) பயன்படுத்தப்படும் ஊடகத்தை (medium) அடிப்படையாகக் கொண்டு கணினி தேக்கச் சாதனங்களை (Storage) மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம். ஊடகத்தின் அம்மூன்று வகைகளையும் குறிப்பிட்டு ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு உதாரணம் தருக.
c).ஒரு கம்பனியின் சம்பளப்பட்டியல் தொகுதியில் உள்ள பரிமாற்றகக்கோப்பில் (Transaction
file) வேலையாளரின் எண் (Employee
Number), வேலை செய்த மணித்தியாலங்களின் எண்ணிக்கை (hours
worked), திணைக்களத்தின் குறியீடு, வார எண், ஆகியன அடங்கியுள்ளன. தொகுதியில் “Employee master”, “Department master” என்னும் இரு அட்டவணைகள் இருக்கின்றனவெனக் கொள்க. பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ள ஒவ்வொரு தரவு உறுப்புக்கும் மிகவும் பொருத்தமான செல்லுபடிச் சரிபார்ப்பினைச் (validation) சுற்றி வட்டமிடுக.
Thursday, May 24, 2012
Saturday, October 29, 2011
முறைமை பராமரித்தல் (System Maintenance)
புதிய முறைமையொன்றை அமுல்படுத்திய பின் அதனை செயற்படுத்தும்போது பிரச்சினைகள் ஏற்படலாம். கணினி முறைமையின் சிறப்பம்சமாவது தொழில்நுட்பத்தின் துரித முன்னேற்றத்திற் கேற்ப அதனைத் தற்காலப்படுத்தப்பட வேண்டியமையாகும். முறைமை நடாத்தும் கட்டத்தில் முறைமையிற்கு ஏற்படும் மாற்றங்களை பரீட்சித்துப் பார்த்துஅதற்கான உத்தேச முறைமை நடாத்தல் கமிட்டியின் மூலம் நிறுவனத்தின் முகாமைத்துவத்திற்கு முன்வைப்பதாகும். அதேபோல் முறைமை நடாத்தும் கமிட்டி மற்றும் முகாமைத:தவத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டிய பல விடயங்க்ள உள்ளன. முறைமையின் நோக்கம், ஆற்றல், உற்பத்தித்திறன், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், செலவு, பாதுகாப்பு மற்றும் முறைமை மூலம் கிடைக்கப்படும் இலாபம் இதில் முக்கியமானதாகும். முறைமை பராமரித்தலின்போது கண்டறிந்த மாற்றங்களை மேற்படி மாற்றங்களுக்கு அமையவே செய்ய வேண்டும்.
முறைமை அமுலாக்கம் (System Implementation)
நிறைவு செய்துகொண்ட முறைமையை அமுல்படுத்துவது இக்கட்டத்தில் நடைபெறும்.
இங்கு முழு முறைமையின் செயற்பாட்டை அட்டைப்படுத்தப்படுவதுடன் முறைமையினை பயன்படுத்தும் விதம் பற்றி பயனர்கள் அனைவருக்கும் அறிவூட்டப்படும். முறைமையினை அமுலாக்கம் பல கட்டங்களாக நடைபெறும். அவையாவன:
நேரடி அமுலாக்கம் (Direct Implimentation)
சமாந்தர அமுலாக்கம் (Parallel Implimentation)
கட்ட (பிரிவு) அமுலாக்கம் (Phased Implimentation)
முன்னோடி அமுலாக்கம் (Pilot Implimentation)
முறைமையிற்கு தேவையான வன்பொருட்களை நிருவுவதும் மென்பொருட்களை நிருவுவதும் இக்கட்டத்தில் நடைபெறும். அவ்வாறே முறைமயின் வெற்றி, தோல்வி இக்கடத்திலேயே தீர்மானிக்கப்படும்.
முறைமை பரீட்சித்தல் (Systems Testing)
இக்கட்டத்தின் அடிப்படை நோக்கமாவது பிழைகளற்ற தரத்தில் உயர்ந்த முறைமை யொன்றினை சேவை பெருநருக்கு வழங்குதலாகும். இங்கு சுயாதீன குழுவொன்றின் மூலம் முறைமையை முழுதாக பரிசோதனைக்கு உள்ளாக்குவதோடு முறைமைமயால் எதிர்பார்க்கப்படும். தேவையினை அவர் எதிர்பார்க்கும் வகையில் வழங்கப்படுகின்றதா என்பதை பரிசீலனை செய்யப்படும். அதே போல் நிரலில் உள்ள குறைபாடுகளையும் பரிசீலனை செய்யப்படும். முறைமை பரிசோதனை கட்டத்தில் முறைமையினை கீழ்வரும் பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்படும்.
அலகு பரீட்சித்தல் (Unit Testing)
ஒன்றிணைத்து பரீட்சித்தல் (Integrated Testing)
முறைமை பரீட்சித்தல் (System Testing)
முறைமை பரீட்சித்தல் (System Testing)
ஏற்புப் பரீட்சித்தல் (Acceptance Testing)
Subscribe to:
Posts (Atom)