Wednesday, June 22, 2011

3. முறைமைப் பகுப்ப்பாய்வு.

 புதிய முறைமையொன்று அபிவிருத்தி செய்யப்படுகின்றது என கற்பனை செய்து கொள்ளுவோமாயின் அடுத்த நிலையானது (Phase) முறைமை பகுப்பாய்வாகும்.

• நடைமுறை முறைமைப் பற்றிய ஒரு ஆழமான கற்றலே முறைமைப் பகுப்பாய்வு நிலையில் நடைபெறுகின்றது.

• இங்கேயே உருவாக்கப் போகும் புதிய முறைமையின் நிர்மாண வேலைக்கான விபரங்கள் பெறப்படுகின்றன.

• முறைமையினால் நிறைவேற்றப்படும் பல்வேறு செயற்பாடுகள் மற்றும் முறைமையின் உள்ளேயும் வெளியேயும் அச்செயற்பாடுகளுக்கு இடையேயான தொடர்புகள் என்பன முறைமைப் பகுப்பாய்வில் ஆழமான கற்கப்படுகின்றது.

• பகுப்பாய்வின் போது நடைமுறை முறைமையில் கிடைக்கக் கூடிய கோப்புகள், தீர்மானம் நிறைவேறறு;ம் நிலைகள் மற்றும் நடைமுறை முறைமையில் கையாளப்படும் கொடுக்கல் வாங்கல்கள் போன்றவற்றிலிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

• இவ்வாறு தரவுகள் சேகரிக்கப்படுவதற்கு நேர்முகப்பரீட்சை (Interviews)நேரடி களஅவதானப்பு (on-site observation) மற்றும் வினாக்கொத்துகள்(questionnaire) போன்ற கருவிகள் உபயோகிக்கப்படுகின்றன.


• புதிய முறைமைக்கான சரியான எல்லையை (Boundary) இலகுவாக வரைந்து கொள்வதற்குபின்வரும் படிமுறைகளைப் பயன்படுத்த முடியும்.
- பிரச்சினைகள் மற்றும் பாவனையாளர்களின் புதிய தேவைகளையும் கருத்திற் கொள்ளல்.

-முறைமையின் புதிய பரப்பினை உள்ளடக்கியதாக முறைமையின் சார்பானவைகளையும் எதிரானவைகளையும் கருத்திற் கொண்டு செயற்படல்.

• தகவல் சேகரிக்கும் முறைகள் எவை?

o Interviews
o Interviews
o Documents
o Observation
o Discussions

2. சாத்தியவள ஆய்வு

2. சாத்தியவள ஆய்வு

• ஆரம்ப கற்றலின் பெறுபேறாகவே சாத்தியவள ஆயவு; அமைகின்றது. முன்மொழியப்பட்டமுறைமையானது தொழிற்படக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ள தன்மை, தேவைகளைப் பூரத்தி செய்யும் தன்மை, வளங்கள்களின் திறமையான பயன்பாடு, செலவுக்கேற்ப பயன்தரும் தன்மை என்பவற்றைப் பரீட்சித்துப் பார்க்கும் செயல்பாடாக சாத்தியவள ஆய்வு அமைகின்றது.

• சாத்தியவள ஆய்வின் பிரதான நோக்கு பிரச்சினை தீர்ப்பது மட்டுமன்றி குறிப்பிட்ட எல்லைப்பரப்பை (scope)அடைவதே ஆகும். செலவு (Cost) நன்மைகள் (benefits) என்பவற்றை மிகவும் திருத்தமாக மதிப்பீடு செய்தலே சாத்தியவள ஆய்வின் செயல்பாடாகும்.

1. முறைமை பற்றிய கற்றல்

• முறைமை அபிவிருத்தி வாழ்க்கைச் சக்கரத்தின் முதலாவது கட்டம் குறித்த முறைமையைப் பற்றிக் கற்றல் ஆகும்.

• இது தற்போது நடைமுறையிலுள்ள பௌதீக முறைமை (Physical system) எவ்வாறு காணப்படுகின்றது என்பதனைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

• நடைமுறையில் முறைமைக் கற்றலானது இரண்டு கட்டங்களாகச் செயற்படுகின்றது.

• முதலாவது முறைமையினுடைய ஆரம்ப கட்ட (Preliminary survey)) ஆய்வு ஆகும். இது முறைமையின் எல்லைப் பரப்பை (scope)இனங்கண்டு கொள்வதற்கு உதவுகின்றது.

• இரண்டாவது முறைமை மேலும் விரிவாவும், ஆழமாகவும் ஆய்வு செய்யப்படுகின்றது.

• இவ்வாய்வின் மூலம் தற்போதைய முறைமையில் பயனாளர்களின் தேவைகள், முறைமையில்காணப்படும் வரையறைகள் மற்றும் பிரச்சினைகள் போன்றன தெளிவாக ஆராயப்படுகின்றது.

• இந்த முறைமைக் கற்றலை முடிவு செய்த பின்னே முறைமை ஆய்வாளரினால் முறைமையின் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு பயனாளர்ளுக்கு முன்வைக்கப்படுகினறது.

• நடைமுறை முறைமையில் இனங்காணப்பட்ட அனைத்து விடயங்கள், நடைமுறை முறையில்காணப்படும் வரையறைகள், நிவர்த்தி செய்யத் தேவையான சிபாரிசுகள் மற்றும்

• பாயனாளரின் தேவையை நிவர்த்தி; செய்வதில் நடைமுறை முறைமையில் காணப்படும் பிரச்சினைகள் போன்றன இந்த முன்மொழியப்பட்ட முறைமையில் உள்ளடக்கப்படுகின்றன.

• முறைமை கற்றலை மேலும் ஆய்வுபூர்வமாக விளக்க, முறைமைக் கற்றல் நிலையானது பின்வரும் கட்டங்களையும் முறையே கடந்து செல்ல வேண்டும்.

- பிரச்சினை இனங்காணலும், செயல்திட்ட ஆரம்பமும் (problem identification and project initiation)

- பின்புல ஆய்வு (background analysis)- அனுமானித்தல் அல்லது கண்டுபிடிப்புகள்(inference or findings )

தகவல் முறைமை

தகவல் முறைமை• ஒரு நிறுவனம் குறிக்கோள் ஒன்றை அல்லது பலதை அடையும் பொருட்டு அதpல் உள்ள
அனைத்து அம்சங்களும் ஒன்று சேர்ந்து இயங்குவது முறைமையாகும்.
அல்லது
• ஏதாவது ஒரு குறிக்கோளை அடையும் பொருட்டு பல பகுதிகள் ஒன்றிணைந்து செயற்படுவது
எனப்படும்.
• முறைமை ஒன்றின் மூன்று முக்கிய அடிப்படை அம்சங்கள்.
1. உள்ளீடு 2. நிரற்படுத்தல் 3. வெளியீடு என்பனவாகும்.
• முறைமை ஒன்றை உருக்கிச் செயற்படும் போது அந்த நிறுவனம் தனது குறிக்குகோளை இலகுவில்
அடைந்து கொள்ள முடியும்.
• கணனி அடிப்படையிலான தகவல் துறைமை ஒன்றை உருவாக்குவது முறைமை அபிவிருத்தி
வாழ்க்கைச் சக்கரம் (SDLC) எனப்படும்.
• முறைமை அபிவிருத்தி வாழ்க்கைச் சக்கரத்தின் படிறிலைகள் வருமாறு :-
1. முறைமை பற்றிய கற்றல்
2. சாத்தியவள ஆய்வு.
3. முறைமைப் பகுப்பாய்வு.
4. முறைமை வடிவமைப்பு
5. முறைமைப் பரிசோதனை
6. முறைமை அமுவாக்கம்.
7. தொடர் பராமரிப்பு.